மகிமையான சபை/Glorious Church
தேவன் சபையை, மீட்கப்பட்ட விசுவாசிகளை, பரலோகக் கோணத்திலிருந்து பார்க்கிறார். பாவத்தின் வல்லமையாலும் பாவங்களாலும் அது தோற்கடிக்கப்பட்டது என்பதைப் பார்ப்பதற்குப்பதிலாக, தேவன் சபையை எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவரை நிறைவாக வெளியாக்குகிற கிறிஸ்துவின் வெற்றிகரமான, மகிமையான நேர்பாதியாகப் பார்க்கிறார். மகிமையான சபையில் வாட்ச்மேன் நீ வேதாகமத்திலுள்ள சபையில் நான்கு முக்கியமான பிரதிநிதிகளைப் பற்றி விவாதிக்கிறார்: ஆதியாகமம் 2இல் ஏவாள், எபேசியர் 5இல் மனைவி, திருவெளிப்பாடு 12இல் பெண், திருவெளிப்பாடு 21, 22இல் மணவாட்டி. ஒவ்வொரு எடுத்துக்காட்டிலும் அவர் தேவனுடைய நித்தியக் குறிக்கோளை நிறைவேற்றுகிற சபையின் உயர்ந்த அழைப்பை வழங்குகிறார். அவரது கையால் எழுதப்பட்டு, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்புகள் மகிமையான சபையின் இந்தப் புதிய, பசுமையான மொழியாக்கத்துக்கு இணைந்து வளமூட்டி, அதை 1939 இலையுதிர் காலத்திலும், 1942 இலையுதிர் காலத்திலும் வாட்ச்மேன் நீயால் கொடுக்கப்பட்ட செய்திகளின் முழுமையான பதிவேடாக மாற்றுகிறது. “ஜெயங்கொள்பவர்களும், தேவனுடைய காலகட்ட அசைவுகளும்” என்ற பிற்சேர்க்கை முக்கியத்துவம்வாய்ந்த, இதுவரை ஒருபோதும் வெளியிடப்படாத இந்தக் குறிப்புகளின் ஒரு பகுதியாகும்.
Reviews
There are no reviews yet.