விளக்கவுரையுடன்கூடிய ஒரு நிமிட வேதவாசிப்பு
புதிய ஏற்பாட்டின் மீட்டுத்திருப்புதல் மொழிபெயர்ப்பு வேதவாக்கியங்களில் காணப்படும் சத்தியத்தின் வெளிப்பாடு, ஒளி, ஜீவன் ஆகியவற்றை வலியுறுத்தும் பரந்தகன்ற அடிக்குறிப்புகளையும் உள்ளடக்குகிறது. இந்தப் போஷிக்கும் உள்ளடக்கம் வேதவாக்கியத்திலும் விளக்கவுரையிலும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நிமிட வேதவாசிப்புகள்
கீழே ஒரு நிமிட பகுதிகளைக் கேட்டு, தரவிறக்கம் (Download) செய்க
“இதோ, கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவர்கள் அவருடைய பெயரை இம்மானுயேல் என்று அழைப்பார்கள்” (இம்மானுயேல் என்பதற்கு தேவன் நம்மோடு என்று அர்த்தமாம்).
மத்தேயு 1:23
இயேசு பெத்தானியாவில், குஷ்டரோகியான சீமோனுடைய வீட்டில் இருந்தபோது, ஒரு பெண் பெருமதிப்புவாய்ந்த தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியுடன் அவரிடம் வந்து, அவர் பந்தியில் சாய்ந்தமர்ந்திருக்கையில் அதை அவருடைய தலைமீது ஊற்றினாள்.ஆனால் சீஷர்கள் இதைக் கண்டபோது, கடுங்கோபமடைந்து, ஏன் இந்த வீண்விரயம்?
மத்தேயு 26:7-8
ஏனெனில் இந்தத் தைலத்தை அவள் என் சரீரத்தின்மேல் ஊற்றினது, என்னை அடக்கம்பண்ணுவதற்காக அவ்வாறு செய்திருக்கிறாள். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உலகம் முழுவதிலும் இந்த சுவிசேஷம் பறைசாற்றப்படும் இடமெல்லாம், இந்தப் பெண் செய்திருப்பதும் அவள் நினைவாகக் கூறப்படும் என்றார்.
மத்தேயு 26:12-13
பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குள் சென்றார்கள்; உடனே, அவர் சாபோத்நாளில் சினகாகுக்குள் பிரவேசித்துப் போதித்தார்.
மாற்கு 1:21
தேவனுடைய இராஜ்ஜியம் எப்பொழுது வருகிறது என்று பரிசேயர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியபோது, அவர் அவர்களுக்குப் பதிலளித்து, தேவனுடைய இராஜ்ஜியம் கண்கூடாகத் தெரியும் விதத்தில் வருவதில்லை; இதோ, இங்கே! அல்லது, அங்கே! என்று அவர்கள் கூறவுமாட்டார்கள். ஏனெனில், இதோ, தேவனுடைய இராஜ்ஜியம் உங்கள் மத்தியில் இருக்கிறது என்றார்.
லூக்கா 17: 20-21
ஏனெனில் நியாயப்பிரமாணம் மோசேயின்மூலம் கொடுக்கப்பட்டது; கிருபையும் நிஜமும் இயேசு கிறிஸ்துவின்மூலம் வந்தன.
யோவான் 1:17
தேவனை ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லை; பிதாவினுடைய மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை அறிவித்திருக்கிறார்.
யோவான் 1:18
மறுநாள் அவன், இயேசு தன்னிடம் வருகிறதைக் கண்டு, இதோ, உலகத்தின் பாவத்தை நீக்கிப்போடுகிற தேவனுடைய செம்மறிக்குட்டியானவர்!
யோவான் 1:29
இயேசு அவனுக்குப் பதிலளித்து, மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன், ஒருவன் புதிதாய்ப் பிறந்தாலன்றி, அவன் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காண முடியாது என்றார்.
யோவான் 3:3
இவர்கள் எல்லாரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும் அவருடைய சகோதரர்களோடும் சேர்ந்து ஜெபத்தில் ஒருமனதோடு உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தல நடபடிகள் 1:14
வேறு பல வார்த்தைகளால் அவன் தீர்க்கமாய்ச் சாட்சிகொடுத்து, அவர்களுக்குப் புத்திசொல்லி, இந்தக் கோணலான தலைமுறையைவிட்டு இரட்சிக்கப்படுங்கள் என்றான்.
அப்போஸ்தல நடபடிகள் 2:40
55 ஆனால் அவன் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய், பரலோகத்திற்குள் உற்றுப் பார்த்து, தேவனுடைய மகிமையையும் தேவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டான்; 56 அவன், இதோ, பரலோகங்கள் திறந்திருப்பதையும் மனிதகுமாரன் தேவனுடைய வலது பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன் என்று கூறினான்.
அப்போஸ்தல நடபடிகள் 7:55-56
அவர்மூலமாகவே நாம் இந்தக் கிருபைக்குள்ளாக பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்றிருக்கிறோம்; இந்தக் கிருபையில் நாம் நின்றுகொண்டு, தேவனுடைய மகிமையின் நம்பிக்கையின் காரணமாக இந்தக் கிருபையில் மேன்மைபாராட்டுகிறாம்.
ரோமர் 5:2
ஆகையால் ஆவியானவரை உங்களுக்கு உதாரத்துவமாய் வழங்கி, உங்கள் மத்தியில் வல்லச் செயல்களைச் செய்கிறவர், அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளிலிருந்து செய்கிறாரா அல்லது விசுவாசத்தைக் கேட்டதிலிருந்து செய்கிறாரா?
கலாத்தியர் 3:5
அந்தச் சபை, எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய அவருடைய சரீரமாய் இருக்கிறது.
எபேசியர் 1:23
ஒருவர்பேரில் ஒருவருக்குப் புகார் இருந்தால், ஒருவரையொருவர் தாங்கி, ஒருவரையொருவர் மன்னியுங்கள்; கர்த்தர் உங்களுக்கு மன்னித்ததுபோலவே, நீங்களும் மன்னிக்கவேண்டும்.
கொலோசெயர் 3:13
ஏனெனில் எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவ கிருபை பிரசன்னமாகிவிட்டது.
தீத்து 2:11
நாம் நீதியில் செய்த கிரியைகளிலிருந்து அல்லாமல், தம் இரக்கத்தின்படி, மறுஜெநநக் கழுவுதல் மற்றும் பரிசுத்த ஆவியின் புதுப்பித்தல்மூலம் அவர் நம்மை இரட்சித்தார்.
தீத்து 3:5
ஆகையால் சமயத்துக்கேற்ற உதவிக்காக நாம் இரக்கத்தைப் பெறவும் கிருபையைக் கண்டடையவும் கிருபையின் சிங்காசனத்திடம் தைரியமாய் முன்நோக்கி வருவோமாக.
எபிரெயர் 4:16
ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டிருக்கிறதும், எங்கள் கண்களினாலே கண்டிருக்கிறதும், நாங்கள் உற்று நோக்கி, எங்கள் கைகள் கையாண்டதுமான ஜீவ வார்த்தையானவரைக்குறித்து.
1 யோவான் 1:1