தேவனுடைய நித்தியத் திட்டம்/God's Eternal Plan
நம் நித்திய தேவனுக்கு ஒரு நித்தியத் திட்டம் இருக்கிறது, அவரது திட்டம் வெறுமனே நம் தனிப்பட்ட எதிர்நோக்குகள் மற்றும் வாஞ்சைகளைப் பூர்த்திசெய்வதைவிட பெரிதும் விஞ்சி நிற்கிறது. தேவனுக்கு அவரது சொந்த வாஞ்சை, அவரது சொந்த இலக்கு இருக்கிறது: கலகத்தின் ஒவ்வொரு சுவடும் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து துடைத்தழிக்கப்பட்டு, எல்லாக் காரியங்களும் கிறிஸ்துவில் தலைமேற்படுத்தப்படும்வரை அவர் திருப்தியடையமாட்டார். தேவனின் நித்தியத் திட்டத்தின் நிறைவேற்றத்தில் சபையின் பங்கு மிக முக்கியமானது. முன்பு ஒருபோதும் இல்லாத விதமாக, இன்று சபை தேவனுக்கும், அவரது எதிரியான சாத்தானுக்கும் இடையிலான ஒரு பிரபஞ்சமளாவிய போராட்டத்தின் நடுவில் இருக்கிறது. இந்தப் போராட்டம் சாத்தானின் கலகத்துடன் துவங்கி, சாத்தான் மனிதனைச் சீர்கெடுப்பதுடன் தொடர்ந்து, சிலுவையில் கிறிஸ்துவினுடைய மரணத்தின் வீரியத்தை சபை அனுபவித்துப் பிரயோகிக்கப் பிரயாசப்படுகின்ற இந்நாள்வரை தொடர்கிறது. சாத்தானை வீழ்த்தும் பொறுப்பு இப்போது சபைக்கு இருக்கிறது, ஏனெனில், பூமியில் தேவனின் ஆவலை முன்னேற்றி எடுத்துச்செல்லவும், சாத்தானிய ஆதிக்கத்தின் ஒவ்வொரு சுவடையும் ஒழித்துக்கட்டவும் சபை வெளிப்பாடு மற்றும் ஜெபத்தினூடாக நாட வேண்டும். தேவனுடைய நித்தியத் திட்டம் என்ற இந்தப் புத்தகத்தில், தேவனின் நித்தியத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மனிதனின் ஒப்பற்ற நிலையையும், சபையின் சிலாக்கியமான நிலையையும் வாட்ச்மேன் நீ திரைநீக்குகிறார். தேவன் எல்லாக் காரியங்களையும் கிறிஸ்துவில் தலைமேற்படுத்துவதற்கான தம் வாஞ்சையை நிறைவேற்றும்படி எவ்வாறு பொதுவாக மனிதன் மூலமும், குறிப்பாக சபையின் மூலமும் வேலைசெய்வதைத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதைச் சுருக்கமான ஆயினும் பிரகாசிப்பிக்கின்ற இந்தச் செய்திகளில் அவர் காட்டுகிறார். தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுதல் என்ற இலக்கில் நம் கர்த்தருடைய நாமத்தைக் கூறுகிற ஒவ்வொருவரும் பங்கெடுப்பார்களாக!
Reviews
There are no reviews yet.