பல கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை மீட்பராக அறிந்திருக்கின்றனர், ஆனால், தேவனுக்கு அதைவிட அதிக முக்கியமான, ஆயினும் பெரும்பாலான விசுவாசிகளால் அதிகம் புரிந்துகொள்ளப்படாத கிறிஸ்துவின் ஓர் அம்சம் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வேதவாக்கியங்களில் ஜீவனின் மிக முக்கியமான வெளிப்பாடு-ல், விட்னெஸ் லீ, கிறிஸ்துவை ஜீவனாக அறிதல் மற்றும் அனுபவித்தல் என்ற வேதத்தின் மைய சத்தியத்தைக் குறித்துப் பேசுகிறார். இந்த சத்தியத்தின் வழங்குதலுக்குக் கூடுதலாக, “நம் ஜீவனாகிய கிறிஸ்துவை” எவ்வாறு நாம் அனுபவித்துமகிழமுடியும் என்பதைக் குறித்த பல நடைமுறை உதாரணங்களும் தரப்பட்டுள்ளன. தேவனின் சிருஷ்டிப்புக்குள் பாவம் நுழைந்ததற்குமுன்பே, பரிசுத்த வேதவாக்கியங்கள், மனிதனுக்குள் தம்மை ஜீவனாக உட்பகிர்வதற்கான தேவனின் வாஞ்சையைக் குறித்துப் பேசுகின்றன. மனிதன் பூமிமீது தம்மை வெளிக்காட்டிப் பிரதிநிதிப்படுத்துவதே தேவனின் வாஞ்சை, மேலும் கிறிஸ்துவின் மீட்பு, மனிதன் கிறிஸ்துவை ஜீவனாக அனுபவமாக்கி அனுபவித்துமகிழ்வதின் மூலம் இந்த இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான ஒரு வழியை மீண்டும் திறக்கிறது. கிறிஸ்து ஜீவனாகக் கிடைக்கக் கூடியவராய் இருப்பது வேதம் முழுவதும் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு, நம் ஜீவ நிரப்பீடாகக் கிறிஸ்துவின் பல மாதிரிகளை வழங்குகிறது, மேலும் புதிய ஏற்பாடு, விசுவாசிகள் ஜீவ ஆவியின் மூலம் அவரது ஜீவனில் இரட்சிக்கப்படுவதைக் குறித்துத் தெளிவாகப் பேசுகிறது. ஜீவன் உட்பகிரும் ஆவியானவர் மூலம், விசுவாசிகள் புதிதாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, பலப்படுத்தப்பட்டு, உச்சமாக அவரது கூட்டு வெளியாக்கமான கிறிஸ்துவின் சரீரமாகக் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றனர். நாம் யாவரும் இந்த மிக முக்கிய வெளிப்பாட்டைப் பார்ப்போமாக!
Weight | 0.35 kg |
---|
Reviews
There are no reviews yet.