Experience of Christ as Life for the Building Up of the Church, The/சபையின் கட்டியெழுப்புதலுக்காக ஜீவனாகக் கிறிஸ்துவை அனுபவித்தல்
ஒவ்வொரு கிறிஸ்தவனின் அனுபவமும் கிறிஸ்துவை ஜீவனாக அனுபவிப்பதன் மீது மையங்கொள்ள வேண்டும். கிறிஸ்து நம் மீட்புக்காக மட்டுமல்லாமல், நாம் அவரது ஜீவனைப் பெறவும், அதை அபரிமிதமாகப் பெறவும் கூட வந்தார். வேதம் முழுவதிலும், ஆதியாகமம் 2இல் உள்ள ஜீவ விருட்சத்திலிருந்து சங்கீதம் 36இல் உள்ள ஜீவ ஊற்று வரையிலும், வெளிப்படுத்தல் 22இல் உள்ள ஜீவத் தண்ணீரின் நதி வரையிலும், கிறிஸ்து நம் அனுபவமகிழ்ச்சிக்கான நம் பங்காக வழங்கப்படுகிறார். இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து நாம் மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்ள முடியும்! சபையின் கட்டியெழுப்புதலுக்காக ஜீவனாகக் கிறிஸ்துவை அனுபவித்தல் என்ற இந்தப் புத்தகத்தில், ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவை அனுபவமாக்கி, அனுபவத்துமகிழ வேண்டிய தேவையைப் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை விட்னெஸ் லீ வழங்குகிறார். சுய-முன்னேற்றத்திற்கான புறம்பான சரிசெய்தலும், முயற்சிகளும் தற்காலிக பலன்களைத் தரக்கூடும் என்றாலும், அவை விரைவில் மங்கிவிடும். எனினும், ஜீவிக்கும் கிறிஸ்துவின் உள்ளார்ந்த கிரியைசெய்தல், மெய்யான, நீடித்த ஆவிக்குரிய வளர்ச்சியை உண்டாக்குகிறது. கூட்டானரீதியில், ஜீவனின் இந்த உள்ளார்ந்த கிரியைசெய்தல், தேவனுடைய வெளியாக்கமாக சபையைக் கட்டியெழுப்புவதையும் விளைவிக்கிறது. ஒவ்வோர் அதிகாரத்திலும், விட்னெஸ் லீ, நாம் அனுபவித்துமகிழத்தக்கக் கிறிஸ்துவின் ஒரு தெளிவான தரிசனத்தை மட்டுமல்லாமல், சபையில் கிறிஸ்துவைத் துய்க்கும் அனுபவமகிழ்ச்சி மற்றும் வெளியாக்கத்திற்குள் நாம் பிரவேசிப்பதற்கான பல நடைமுறை வழிகளையும் வழங்குகிறார்.
While outward adjustment and efforts at self-improvement may produce temporary results, they quickly fade. The inward operation of the living Christ, however, produces genuine and lasting spiritual growth. The Experience of Christ as Life for the Building up of the Church unveils that this inward operation of life also results in the building up of the church as the expression of God. In each chapter, Witness Lee presents not only a clear vision of our enjoyable Christ but also many practical ways for us to enter into the enjoyment and expression of Christ in the church.
Reviews
There are no reviews yet.