பரிசுத்த ஆவியும் நிஜமும் / Holy Spirit and Reality
கிறிஸ்தவ வாழ்க்கையானது ஞானஸ்நானம், அப்பம் பிட்குதல், ஆராதனை, துதி, ஜெபம், மன்னிப்பு, தாழ்மை, பரஸ்பர அன்பு போன்ற பல புறம்பான காரியங்கள் மற்றும் பொருட்களோடு சம்பந்தப்பட்டுள்ளதுபோல் தோன்றுகிறது. உண்மையில், இந்தக் காரியங்கள் மீது குவிமையங்கொண்டும், அவற்றுக்குப் பின்னே உள்ள ஆவிக்குரிய நிஜத்தை இழந்துபோவது எளிது. இந்த நிஜம் பரிசுத்த ஆவியே. நிஜத்தின் ஆவியாக இருக்கிற பரிசுத்த ஆவிக்கு அப்பாற்பட்டு, இந்தக் காரியங்கள் அனைத்தும் எவ்வளவு உத்தமமாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் சரி,அவை வெறுமனே, எந்த நிஜமான உள்ளார்ந்த ஆவிக்குரிய உள்ளடக்கமும் இல்லாத, புறம்பான நடத்தையாகவே இருக்கின்றன. பரிசுத்த ஆவியும் நிஜமும் என்ற புத்தகத்தில், புறம்பான நடைமுறைகளிலிருந்து பரிசுத்த ஆவியை அறிவதன் மீதும், அனுபவிப்பதன்மீதும் மையங்கொள்கிற ஒரு மெய்யான, ஆவிக்குரிய வாழ்க்கைக்கு விசுவாசிகள் முன்னேற வேண்டிய தேவையைக் குறித்து வாட்ச்மேன் நீ பேசுகிறார். நாம் எல்லா நிஜத்திற்குள்ளும் நடத்தப்படுமாறு ஆவியானவர் தம்மையே நமக்கு வெளிப்படுத்தவும், நம்மை ஒழுங்குபடுத்தவும் துடிப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு ஆவிக்குரிய நிஜத்தை நமக்குக் காட்டுகிறது, அப்படியிருக்கையில், பரிசுத்த ஆவியின் ஒழுங்குபடுத்துதலோ நம் சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதன் மூலம் எல்லா ஆவிக்குரிய நிஜத்திற்குள்ளும் நம்மை நடத்துகிறது. கர்த்தருக்கு முன்பு நம் உண்மையான நிலைமையைப் பொருத்தவரை சுயமாய்-வஞ்சிக்கப்படுவதின் அபாயத்தைக் குறித்த ஒரு தெளிவூட்டும் எச்சரிப்பின் வார்த்தையுடன் வாட்ச்மேன் நீ இந்தப் புத்தகத்தை முடிக்கிறார்.
Reviews
There are no reviews yet.