ஜீவனின் அறிவு / Knowledge of Life
தேவனுடைய சாயலைக் கொண்டிருந்து, அவரது மகிமையை வெளிப்படுத்துகிற, அவரது அதிகாரத்தைக் கொண்டிருந்து அவரது எதிரியோடு இடைபடுகிற மனிதனில், முழுமையான கூட்டு வெளியாக்கத்தை ஆதாயப்படுத்துவதே தேவனுடைய விருப்பமும் நோக்கமும் ஆகும். எனினும், இந்த விருப்பத்தையும் நோக்கத்தையும் தேவனுடைய சொந்த ஜீவன் மூலமாகவே அடைய முடியும் என்பதை ஒருசில விசுவாசிகளே உணர்கின்றனர். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் நமக்குக் கிடைக்கிறதான தெய்வீக ஜீவனை அறிந்து, அனுபவிக்கிற காரியத்தை இன்னும் வெகு சிலரே தொட்டிருக்கின்றனர். தேடுகிற விசுவாசிகள் பலர் இருந்தாலும், மிகக் குறைவானவர்களே ஜீவனின் வழியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அதற்குப் பதிலாக, வைராக்கியம், அறிவு, வல்லமை, வரங்கள் போன்ற காரியங்களை ஜீவன் என்று தவறாகப் புரிந்திருக்கின்றனர். ஜீவனின் அறிவில், மறுபிறப்புடன் ஆரம்பித்து, அதாவது நாம் தெய்வீக ஜீவனைப் பெறுவதில் ஆரம்பித்து, ஜீவனின் உள்ளார்ந்த உணர்வை அறிந்துகொள்ளுதலுக்கும் அதன்படி வாழ்தலுக்கும் முன்னேறிச்சென்று ஜீவனுக்கு நடத்துகிற பாதையை விட்னெஸ் லீ காட்டுகிறார். கிறிஸ்துவை உண்மையாக அனுபவிப்பதற்கான மேன்மையான அஸ்திவாரத்தையும், ஜீவனின் அனுபவம் என்ற விட்னெஸ் லீ-யின் துணைப் புத்தகத்திற்கான உதவிகரமான அறிமுகத்தையும் ஜீவனின் அறிவு வழங்குகிறது.
Reviews
There are no reviews yet.